இந்நிலையில் சிவாஜிநகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இடங்களில் பிரகாஷ் ராஜ் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவரை நேரில் கண்ட பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுக்க போட்டிப் போட்டனர். அப்போது பிரகாஷ் ராஜ் கூறும்போது, “பெங்களூரு மத்திய தொகுதியின் பிரச்சினைகளை முழுமையாக அறிந்து கொள்வதற்காக மக்களை சந்தித்து வருகிறேன்.
இங்குள்ள பிரச்சினைகளை மையமாக வைத்து எனது தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளேன். முதல்கட்டமாக நான் போட்டியிடும் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்க முடிவெடுத்துள்ளேன்” என்றார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தமிழர்களின் வாக்குகளை கவரும் வகையில் அங்குள்ள தமிழ் அமைப்பினரிடம் பிரகாஷ் ராஜ் பேச முடிவெடுத்துள்ளார்.
இதேபோல அங்கு கணிசமாக வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் தெலுங்கர்களின் வாக்குகளை பெறவும் பிரகாஷ் ராஜ் தரப்பில் வியூகம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.