பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்காதது துரதிர்ஷ்டமாகும் என்று சிவசேனா கட்சி மத்தியஅரசை சாடியுள்ளது.ாதது துரதிருஷ்டமாகும் என்று சிவசேனா கட்சி மத்தியஅரசைச் சாடியுள்ளது.
சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் இன்று கூறப்பட்டுள்ளதாவது:
''பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது மறைந்த கலைஞர் பூபன் ஹசாரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளது தவறான கருத்தை உணர்த்துகிறது.
மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில் இருந்தே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்தமானில் செல்லூர் சிறையில் வாடிய வினாயக் தாமோதர் சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட கோரிக்கை விடுத்து வருகிறோம்.
எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வீரசவார்க்கருக்கு விருது வழங்க வலியுறுத்தினோம். கடந்த காலத்தில் இருந்த அரசுகள் செய்த தவறுகளை நிவர்த்தி செய்ய, தற்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வீரசவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், முந்தைய அரசுகள் இந்துத்துவா கருத்துகளை முன்வைத்து, வீரசவார்க்கருக்கு விருது வழங்காமல் தவிர்த்தன.
காங்கிரஸ் கட்சி தனது பதவிக்காலத்தில் வீரசவார்க்கரை உதாசினம் செய்தது. ஆனால், மோடி தலைமையிலா அரசு ஆட்சிக்கு வந்தும் என்ன செய்தது?. பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, வீரசவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கடினமாக வலியுறுத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் வீரசவார்க்கருக்கு விருது வழங்காமல் தாமதிக்கிறது. பாஜக ஆட்சியில் ராமர் கோயிலும் கட்டப்போவதில்லை, வீரசவார்க்கருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்போவதில்லை.
பிரதமர் மோடியின் ஆட்சியில் வீரசவார்க்கருக்கு பாரத ரத்னா வழங்காமல் தவிர்ப்பது துரதிர்ஷ்டமாகும். பிரதமர் மோடி கடந்த மாதம் அந்தமான் சென்றிருந்தபோது, வீரசவார்க்கார் அடைக்கப்பட்டு இருந்த சிறையை பார்வையிட்டு வந்தார்.
பிரதமர் மோடி தியானங்கள் பல செய்கிறார். ஆனால், கடலின் அலையால் அவை அடித்துச் செல்லப்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்கும்போது ஏன் அவருக்கு 2-வது முறையாகக் குடியரசுத் தலைவர் பதவி வாய்ப்பு வழங்கவில்லை. அவர் 2-வது முறையாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பார்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.