இந்தியா

தீவிரவாதியாய் இருந்து ராணுவ வீரராகி பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம்: காஷ்மீர் வீரருக்கு அசோக் சக்ரா விருது

செய்திப்பிரிவு

தீவிரவாதியாக இருந்து ராணுவ வீரராகி வீர மரணமடைந்த லான்ஸ் நாயக் நசீர் அகமது வானிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அசோக சக்ரா விருது, லான்ஸ் நாயக் நசீர் அகமது வானிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் தீவிரவாதியாக இருந்து, பின்னர் ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகளுடான துப்பாக்கிச் சண்டையின்போது அகமது வானி (38) வீர மரணம் அடைந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அசோக சக்ரா விருதுக்கு  லான்ஸ் நாயக் நசீர் அகமது வானிக்கு வழங்கப்பட்டுள்ளது.  விருதினை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT