இந்தியா

சம்பள பாக்கி கேட்டு 7 இந்திய ஊழியர்களை சிறைபிடித்த எத்தியோப்பியர்கள்

செய்திப்பிரிவு

எத்தியோப்பியாவில் சம்பள பாக்கிகேட்டு இந்திய நிறுவனத்தின் 7 ஊழியர்களை உள்ளூர் தொழிலாளர்கள் சிறைபிடித்துள்ளனர்.

இந்தியாவின் ‘ஐஎல் & எப்எஸ்’ என்ற நிறுவனம் 2 ஸ்பெயின் நிறுவனத்துடன் சேர்ந்து எத்தியோப்பியாவில் சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில் ‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனம் கடன் சுமையில் சிக்கியதால் இந்தப் பணிகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பள பாக்கி கேட்டு ‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் 3 இடங்களில் சிறைபிடித்து வைத்துள்ளனர்.

இவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஆதரவாக உள்ளதாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய ஊழியர்கள் அனுப்பியுள்ள இமெயில் கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.இந்நிலையில் எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது,“இந்த விவகாரத்தில் எத்தியோப்பிய அதிகாரிகள் மற்றும் ‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

பிரச்சினைக்கு தீர்வு காண முயன்று வருகிறோம்” என்றார்.“‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனம் 1,260 கோடி டாலர் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளால் எத்தியோப்பியாவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை என அந்த நிறுவனம் கூறுகிறது.

SCROLL FOR NEXT