இந்தியா

கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க திஹார் சிறையில் கார் உதிரி பாக தயாரிப்பு மையம்

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள திஹார் சிறைச் சாலையில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு மையம் தொடங்கப் பட்டுள்ளது. இங்கு கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையத்தை சிறைத்துறை தலைமை இயக்குநர் அலோக் வர்மா திறந்துவைத்தார். ஜப்பானின் ஃபுருகவா நிறு வனம், இந்தியாவின் அசோக் மிண்டா குழுமத்தின் ஸ்பார்க் மிண்டா ஆகியவை இணைந்து நிறுவி யுள்ள மிண்டா ஃபுருகவா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த மையத்தை தொடங்கியுள்ளது.

இதில் காரின் வயரிங் தொடர் பான உதிரி பாகங்கள் தயாரிக் கப்படும். இவை மாருதி சுஸுகி உள்ளிட்ட கார் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும். சிறை யில் உள்ள கைதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் மிண்டா ஃபுருகவா எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உதிரிபாக உற்பத்தி விரைவில் தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT