இந்தியா

காஷ்மீரில் கடைசி மனிதனுக்கும் நிவாரணப் பொருள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சாதாரண, கடைசி மனிதனுக்கும் உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் சென்றடைய வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

நிவாரணப் பணிகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT