இந்தியா

இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்: மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

செய்திப்பிரிவு

இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சென் தெரிவித்துள்ளார்.

இருப்பிடச் சான்று தொடர்பான வழக்கை விசாரித்த அவர் கூறியதாவது:

கடந்த 1947-ம் ஆண்டு மதத்தின் பெயரால்தான் இந்தியா, பாகிஸ் தான் பிரிக்கப்பட்டன. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறி வித்துக் கொண்டது. அப்போதே இந்தியாவையும் இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்.

இப்போது இந்தியாவை இஸ் லாமிய நாடாக மாற்ற முயற்சிக் கக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பிரச்சினை யின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டின் நலனை கருத் திற் கொண்டு இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தியா முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். சட்டத்தை மதிக்காதவர் களை நாட்டின் குடிமகன்களாக கருதக்கூடாது.

முஸ்லிம் சகோதர, சகோதரி களுக்கு நான் எதிரானவன் கிடையாது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சட்டத்துக்கு மதிப் பளித்து நடக்கின்றனர். அவர்கள் அமைதியுடன் வாழ அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தெரிவித் துள்ளார்.

நீதிபதி எஸ்.ஆர். சென்னின் கருத்துக்கு எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT