இந்தியா

அலிபிரி குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த 2003-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்வதற்காக திருப்பதியிலிருந்து திருமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அலிபிரி மலை வழிப் பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டு வெடித்ததில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக திருப்பதி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, 33 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 11 பேர் இறந்து விட்டனர். இருவர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்மோகன் ரெட்டி, நரசிம்மா ரெட்டி என்கிற ராஜசேகர், சந்திரா என்கிற கேசவுலு ஆகிய 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். இவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

SCROLL FOR NEXT