இந்தியா

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார்?

செய்திப்பிரிவு

டெல்லி குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார்.

இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தப் பின்னணியில் வரும் குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் வரும் 2019-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் காந்திக்கு மிகவும் நெருக்கமான தென்ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக உள்ள சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT