'சிவப்புக் கோள்' என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் இணைந்த வெற்றியைக் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி, சிவப்புச் சட்டை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற மேல் சட்டை அணிந்து வந்திருந்தார்.
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வரலாறு படைத்துவிட்டோம்" என்றார்.