மேற்கு வங்கம் பர்ன்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான செயில் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நியூ கோக் ஓவன் பேட்டரி 11-ல் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது.
பழுதான பேட்டரிகளை சரிசெய்யும்போது இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.