இந்தியா

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிடிஐ

காஷ்மீரில் இன்றுகாலை பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெற்குக் காஷ்மீரில் ஹன்ஜன் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் இதற்கு பதிலடி கொடுத்தனர். இத் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் யார்? அவர்கள் எக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதுபோன்ற விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ராணுவ உயரதிகாரி தெரிவித்தார்.

அப்பகுதியில் தேடுதல் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கை மேலும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT