இந்தியா

அக்.3-ல் வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

அனிதா ஜோஷுவா

பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக வானொலி மூலம் தனது எண்ணங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 3-ஆம் தேதி, நாட்டு மக்களுக்காக காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் உரையாடவுள்ளார் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் அவரிடம், மக்களும் அவர்களுடைய கருத்துக்களை 'எனது அரசு' (MyGov ) >http://mygov.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "குடிமக்கள் அனைவரும் வளர்ச்சி, நல்லாட்சிக்கான தங்களது பிரச்சினைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிப்பதற்காக 'எனது அரசு' (MyGov ) என்ற சிறப்பு இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.

இதில், பிரதமரின் வானொலி கலந்துரையாடல் குறித்தும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வானொலி உரையாடலை பிரதமர் மோடி மாதம்தோறும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த இணையதளத்தில் கருத்து பகிர்ந்திருந்தவர்களில் 46,18 சதவீதம் பேர் தெரிவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT