நாடு முழுவதும் 3 லட்சத்து 20 ஆயிரம் வங்கி அதிகாரிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுகின்றனர். அரசு விடுமுறை, அடுத்தடுத்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந் துரைப்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பை கைவிட வேண்டும், ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளது போல மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய வங்கி அதி காரிகள் கூட்டமைப்பு, இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் வங்கி அதிகாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற் கின்றனர். அதிகாரிகள் மட்டும் போராட்டத்தில் பங்கேற்பதால், வங்கி கிளைகள் திறந்திருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கான பெரும்பாலான சேவைகள் கிடை க்காது என்று கூறப்படுகிறது.
மேலும், நாளை 4-வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடு முறை, ஞாயிற்றுக்கிழமை வழக்க மான வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை கிடைக்காது. திங்கட் கிழமை (24-ம் தேதி) வங்கிகள் இயங்கும். ஆனால், மறுநாள் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடு முறை. 26-ம் தேதி வங்கி அதி காரிகள், ஊழியர்கள் சங்கங் கள் அனைத்தும் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத் துக்கு அழைப்பு விடுத்துள் ளன.
இதில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதனால் அன்றும் வங்கிகள் இயங்காது. ஆகவே, அரசு விடுமுறை, அடுத் தடுத்த வேலைநிறுத்தப் போராட் டங்கள் காரணமாக வாடிக்கை யாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு ஆலோசகர் தாமஸ் பிராங்கோவிடம் கேட்டபோது, ''வெள்ளிக்கிழமை (இன்று) நடக் கும் வேலைநிறுத்தத்தில் வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டாலும் வங்கிப் பணிகள் முற்றிலும் பாதிக்கும். 26-ம் தேதி வேலைநிறுத்தத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கோரிக்கைகளில் உள்ள நியா யங்களை உணர்ந்து மத்திய அரசு அவற்றை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் போராட் டம் தொடரும்'' என்றார்.