பேட்டரி மூலம் இயங்கும் இ ரிக் ஷாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில், இ-ரிக் ஷாக்கள் எனப்படும் பேட்டரி மூலம் இயங்கும் சிறு வாகனங்கள் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி, பாதுகாப்பற்ற முறையில் இயங்குவதால், இந்த வாகனங்களை தடை செய்யக் கோரி ஷா நவாஸ் கான் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன்படி, டெல்லியில் இ- ரிக் ஷாக்கள் இயங்க இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 31-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக் கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் பதர் தரேஜ் அகமது மற்றும் சித்தார்த் மிருதுல் ஆகியோ ரடங்கிய அடங்கிய அமர்வு கூறியிருப்பதாவது:
இ-ரிக் ஷாக்களை ஆய்வு செய்த மத்திய தொழில்நுட்ப அமைப்பு அவை மோட்டார் வாகனம்தான் என்று சான்றிதழ் அளித்துள்ளது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி அவை பதிவு செய்யப்படு வதில்லை.
எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. டெல்லியில் இ-ரிக் ஷாக்கள் நாளுக்குள் நாள் பெருகி வருவது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
அவை மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளவையாக இருந்தாலும், சட்டத்தை மீறி இயங்குவதை அனுமதிக்க முடியாது. இதுகுறித்து நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசுதான் சட்டம் கொண்டு வர வேண்டும்.
அதுவரை இ-ரிக் ஷாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.