இந்தியா

ஜார்கண்ட் இடைத் தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி

செய்திப்பிரிவு

ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.

ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி எம்எல்ஏவாக இருந்வர் ஜார்கண்ட் கட்சி தலைவர் ஏனாஸ் எக்கா. ஒருவரை கடத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் பதவி இழந்ததால் அத்தொகுதியில் கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளராக பசன்ட் சோரெங்னும், காங்கிரஸ் சார்பில் நமன் பிக்சல் கொங்காரியும், ஜார்கண்ட் கட்சி சார்பில் ஏனாஸ் எக்காவின் மனைவியான மேனான் எக்கா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் நமன் பிக்சல் கொங்காடி 9,658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் இருந்து அந்த தொகுதியை காங்கிரஸ் கைபற்றியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தல் ஜார்கண்ட் கட்சி பாஜக அணியிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணியிலும் உள்ளன. இதற்கு முன்பு நடந்து இரண்டு இடைத் தேர்தல்களிலும் ஆளும் பாஜக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT