இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா (62) நேற்று பொறுப்பேற்றார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓ.பி. ராவத் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அப்பதவிக்கு சுனில் அரோரா நியமிக்கப்பட்டார்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்ட்ரா, ஹரியாணா, ஆந்திரா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள முக்கிய மான தருணத்தில், இவர் தலை மைத் தேர்தல் ஆணையராக பொறுப் பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
1980-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி யான அரோரா, மத்திய நிதித்துறை, ஜவுளித்துறை, திட்ட ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றில் செயலராகவும் பொறுப்பு வகித்தவர்.
அதேபோல், ராஜஸ்தான் மாநில முதன்மைச் செயலராகவும், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலராக வும் அவர் பதவியில் இருந்துள்ளார்.
ஒத்துழைப்பு வேண்டும்
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட சுனில் அரோரா, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் முக்கியமான தேர்தல்கள் நடைபெறும் காலகட்டத்தில், தலை மைத் தேர்தல் அதிகாரியாக பொறுப் பேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் தலையாயதாக கருதப்படும் தேர்தல்கள், நியாயமாக வும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். இது சாத்தியமாக, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்