இந்தியா

காஷ்மீரில்  6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

தெற்குக் காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெற்குக் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அரம்போரா கிராமத்தில் தேடுதல் வேட்டைக்காக ராணுவத்தினர் களமிறங்கினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையில் பலமான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைவர் ஸ்வயம் பிரகாஷ் பானி தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வேறெந்த சேதாரமும் ஏற்படவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT