இந்தியா

மஹாராஷ்டிரா காட்டில் தியானம் செய்து கொண்டிருந்த பவுத்தத் துறவி சிறுத்தைக்கு இரையான பரிதாபம்

ஏஎஃப்பி

மஹாராஷ்டிராவில் மும்ப 825 கிமீ மேற்கே உள்ள காட்டுப்பகுதி சிறுத்தைப் புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி, இதில் தியானம் செய்து கொண்டிருந்த பவுத்தத் துறவி ஒருவர் சிறுத்தையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பரபரப்பாகியுள்ளது.

ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 வயது பவுத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து யோக நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரத்தில் அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து குதறியது. இவருடன் தியானம் செய்த சிஷ்யர்கள் இருவர் தப்பியோடி தகவலை போலீஸுக்குத் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் அந்த இடத்தில் இல்லை, சிறுத்தை அவரை கடித்துக் குதறி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.  “மிகவும் மோசமான நிலையில் அவரது உடல் இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி காட்டுக்குள் கிடந்தது” என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு போலீஸ் அதிகாரி கிருஷ்ணா திவாரி தெரிவித்தார்.

ஏற்கெனவே இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது என்றும் ஆபத்தான பகுதி என்றும் அதிகாரிகள் எச்சரிக்கையையும் மீறி பவுத்தத் துறவிகள் இங்கு காலையில் தியானம் செய்ய வருவதாக புகார்கள் உள்ளன.

திங்களன்றுதான் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கடையின் முதலாளி சந்தீப் அர்ஜுன் சிறுத்தையின் சீற்றத்துக்குப் பலியான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் ஒரே சிறுத்தைதான் இரு பலிகளுக்கும் காரணமா என்பது தெரியவில்லை.

2017-ல் மட்டும் 431 சிறுத்தைகள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன, ஆனால் சிறுத்தையால் பலியான மனிதர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் இல்லை ஆனால் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 100 மனித உயிர்கள் சிறுத்தையினால் பலியாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT