மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் கே.ஆர். தேஷ்பாண்டே. மூத்த நீதிபதியான இவர், சிற்றுண்டி அருந்துவதற்காக நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு நேற்று மதியம் சென்றிருந்தார்.
இந்நிலையில், அங்கு வந்த வழக்கறிஞர் டி.எம். பராத்தே என்பவர், நீதிபதி தேஷ்பாண்டேவுடன் ஒரு வழக்கு குறித்து விவாதித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது, நீதிபதி தேஷ்பாண்டேவை வழக்கறிஞர் பராத்தே சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பராத்தேவை தடுத்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி அளித்த புகாரின் பேரில் சர்தார் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - பிடிஐ