ரிசர்வ வங்கியின் புதிய கவர்னராக முன்னாள் பொருளாதார விவாகரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டை உலுக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த முக்கிய அதிகாரி சக்திகாந்த தாஸ் என்று அறியப்பட்டவர்.
ஏற்கெனவே 2016-ம் ஆண்டு செப்டம்பரில் ரகுராம்ராஜன் ஓய்வு நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக அடுத்து பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் உர்ஜித் பட்டேலுடன் சக்தி காந்ததாஸின் பெயரும் ஒன்று. ஆனால் அந்த நேரத்தில் அவர் பெயர் பரிசீலிக்கப்படாமல் உர்ஜித் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 2017 மே மாதம் சக்திகாந்த தாஸ் ஓய்வுப்பெற்றார். இந்நிலையில் உர்ஜித் பட்டேல் திடீர் விலகலை அடுத்து சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை உலுக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஊடகங்களில் ஒரு மனிதர் தினமும் தோன்றி பிரபலமானார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் மத்திய அரசின் அடுத்தடுத்த திட்டங்கள்,ம் செயல்பாடுகள் பற்றி அறிவித்த அவர் மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் வரும் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளராக இருந்தார்.
ஒடிஸாவை பூர்விக்கமாக கொண்டிருந்தாலும் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அவர். 1980-ம் ஆண்டு ஐஏஎஸ். பேட்ஜ். தமிழக கேடர் ஆபீஸர். சக்தி காந்த தாஸ், தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர், தமிழக அரசின் வருவாய்த்துறை கமிஷனர், வணிக வரித்துறைச் செயலாளர், தொழில் துறைச் செயலாளர் என்று பல்வேறு பதவியில் இருந்தவர். 2008-ம் வருடம் டெல்லியில் மத்திய அரசின் பணிக்காக சென்றார்.
2008 முதல் 2013 வரையில் நிதித்துறையின் பல்வேறு பதவிகளில் இருந்தார். 2014-ல் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, சக்தி காந்ததாஸை மத்திய அரசின் வருவாய்த்துறைச் செயலாளராக நியமித்தார், 2015-ல் மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
அந்த நேரத்தில்தான் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன் முழு மூளையும் சக்திகாந்ததாஸ்தான் என்று அப்போது பேசப்பட்டது.