இந்தியா

நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு காங். தலைவர்கள்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்களாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நிதி, வெளியுறவு, உள்துறை ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு முறையே வீரப்ப மொய்லி, சசி தரூர், பி.பட்டாச்சார்யா ஆகியோர் தலைவர்களாக இருக்கின்றனர்.

அறிவியல், தொழில்நுட்ப துறை நாடாளுமன்ற குழு தலைவராக அஸ்வனி குமார், சட்டம், பணியாளர் நலத்துறை நாடாளுமன்ற குழுவின் தலைவராக சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

பொது கணக்குக் குழு தலைவராக காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ் நியமிக்கப்படவுள்ளார்.

ராகுல் காந்தி வெளிறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுக்கள் எதிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடம் பெறவில்லை.

பாஜகவின் இளம் தலைவர் அனுராக் தாக்கூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற குழுவில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உறுப்பினராக உள்ளார்.

SCROLL FOR NEXT