காஷ்மீரில் கடந்த வாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பொதுமக்கள் 7 பேர் பலியான நிலையில் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக உடலை துளைக்கும் குண்டுகளை பயன்படுத்தி உள்ளதாக என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிமூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு கடந்த சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிமூ கிராமத்தில் பாதுகாப்புபடையினர் தேடுதக் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வீடாகப் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் 7 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தாமல் உடலை துளைக்கும் குண்டுகள் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர் தரப்பில், ‘‘கடந்த டிடம்பர் 15 ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது பெல்லட் குண்டுகள் அல்ல அவை துளைக்கு குண்டுகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 பேரில் 20 பேர் மீது துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் குண்டுகள்தான் காயத்தை ஏற்படுத்தி இருந்தன.
இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. மேலும் கொல்லப்பட்ட 7 பொதுமக்களில் 2 பேர் துப்பாக்கி குண்டுகளால் நெற்றி, மார்பு போன்ற இடங்களில் குறிவைத்து சூடபப்ட்டுள்ளனர்” என்றார்
கடந்த 2016 ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்கான் வானி பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டப்போது நடந்த போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். அப்போது பொதுமக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்துக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அப்போதும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.