இந்திய விமானப் படையும் அமெரிக்க விமானப் படையும் இணைந்து இன்று போர் பயிற்சியை தொடங்க உள்ளன.
இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இருநாட்டு விமானப் படைகளும் இணைந்து மேற்குவங்கத்தின் கலைகுண்டா, பனாகர்க் விமானப்படை தளங்களில் 12 நாட்கள் போர் பயிற்சியை நடத்துகின்றன. இந்த போர் பயிற்சி இன்று தொடங்குகிறது.
அமெரிக்க விமானப்படைத் தரப்பில் எப்15, சி130 ரக விமானங்களும் இந்திய விமானப்படைத் தரப்பில் சுகோய், ஜாகுவார், மிராஜ், சி130 ரக விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.