இன்று வெளியாகி உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி புதிதாக உருவானது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து டெல்லியில் போட்டியிட்ட கட்சி அங்கு அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்கிறது. முதல்முறையில் 49 நாள் மட்டுமே நீடித்த ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருந்தது.
இதனிடையே, 2014 மக்களவை தேர்தலிலும் நாடு முழுவதிலும் போட்டியிட்ட கட்சிக்கு பஞ்சாபில் மட்டும் மூன்று எம்பிக்கள் கிடைத்தனர். இதையடுத்து, மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.
ஆனால், அக்கட்சிக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. மபியில் 208, ராஜஸ்தானில் 141 மற்றும் சத்தீஸ்கரின் 85 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.