ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் ‘சிசாட்’ என்ற சிந்தனைத் திறன் தேர்வு கடந்த 2011-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திடீர் மாற்றத்தால் பிராந்திய மொழிகள், கலை மற்றும் சமூக அறிவியல் பாடப் பின்னணி கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனை சமாளிக்க பிறகு மதிப்பெண் முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதனால் 2011 முதல் 2015 வரை தேர்வு முறை மாற்றத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு வயது வரம்பு மற்றும் சாதிப் பிரிவு பார்க்காமல் கூடுதல் வாய்ப்பு வழங்க வேண் டும் என கோரிக்கை விடுக்கப் பட்டு வந்தது.
இதே கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நேற்று மார்க் சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு கட்சி எம்பிக்கள் பேசினர்.