இந்தியா

காவல், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உதவிக்கு ‘112’ அவசர செயலியில் பெண்களுக்கு சிறப்பு வசதி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம்

செய்திப்பிரிவு

நம் நாட்டில் காவல் (100), தீயணைப்பு (101), ஆம்புலன்ஸ் (108), பெண்கள் பாதுகாப்பு (1090) உள்ளிட்ட அவசர உதவிகளுக்காக தனித்தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக் காவைப் போல, தேசிய அளவில் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வசதி, முதல் முறையாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நாகாலாந்து மாநிலம் கொஹிமாவில் இந்த வசதியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘112 இந்தியா’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.

இதில் ஷவுட் (SHOUT) என்ற வசதி இடம் பெற்றுள்ளது. பிரச்சினையில் சிக்கும் பெண்கள், தங்களுக்கு அருகில் உள்ள பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் அல்லது அவசர உதவி மைய ஊழியரின் உடனடி உதவியைப் பெற இந்த வசதி உதவியாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT