கடவுள் ஹனுமனுக்கு அதிகமாகத் தொந்தரவு கொடுக்காதீர்கள், உங்கள் இலங்கை பற்றி எரிந்துவிடும் என்று சமீபகாலமாக பாஜகவின் ஹனுமனை சர்ச்சையைக்கி வருவதற்கு உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடவுள் அனுமர் குறித்த சர்ச்சையை முதன்முதலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தி் ஈடுபட்டிருந்த ஆதித்யநாத் “அனுமன் தலித், காட்டுவாசி” என்று பேசி சர்ச்சை ஏற்படுத்தினார்.
அடுத்த சில நாட்களில் தேசிய பழங்குடியினத் தலைவர் நந்தகுமார் சாய் , கடவுள் அனுமன் ஒரு பழங்குடி என்று தெரிவித்தார். கடந்த வாரம் உ.பி. பாஜக எம்எல்சி புக்கால் நவாப், அனுமன் குறித்து கூறுகையில், அனுமன் ஒரு முஸ்லிம் என்று பரபரப்பை கூட்டினார்.
உ.பி. மதங்கள் விவகாரத்துறை அமைச்சர் லக் ஷ்மி நாராயன் சவுத்ரி, கடவுள் அனுமன் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர் என்றார். சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ராமா சங்கர் வித்தியார்த்தி, கடவுள் அனுமர் பழங்குடியினத்தில் கோண்டா பிரிவைச் சேர்ந்தவர் என்று தங்களுக்கு தேவைப்படும் பெயர்களை ஹனுமனுக்கு சூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில், பாஜகவினர் அனுமன் பெயரை சர்ச்சைக்குரிய தாக்கி வரும் நிலையில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் இதற்கு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் லக்னோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ பாஜகவினர் அனுமனை அதிகமாகத் தொந்தரவு செய்யாதீர்கள். அவரின் வாலால் லேசாக உரசியதற்கே நீங்கள் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டார்கள். தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால்,அவரின் வாலால் உங்கள் இலங்கையை எரித்து விடுவார்” என எச்சரிக்கை விடுத்தார்.