அதிவிரைவு ரயில்களின் 3 ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த வசதி ராஜ்தானி, துரந்தோ மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில்களின் 3 ஏசி பெட்டிகளில் அமலாக்கப்படுகிறது. வயது வரம்பின்றி தனியாக அல்லது குழுவாகப் பயணம் செய்யும் பெண்கள் இதில் முன்பதிவு செய்யும்போது பலனடைவார்கள்.
ஏற்கெனவே, இதேபோன்று பெண்களுக்காக பல அனைத்து ரயில்களிலும் முன்பதிவில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகை மெயில் மற்றும் விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புப் பெட்டிகளில் 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கரீப் ரத் ரயிலிலும் 6 படுக்கைகள் முன்பதிவில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அனைத்து ரயில்களின் சாதாரண வகுப்பின் பொதுப்படுக்கை பெட்டிகளில் 6 மற்றும் ஏசி பெட்டிகளில் 3 என மூத்தகுடி, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே ஒதுக்கீடு, ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களின் அனைவருக்குமான பொதுப்பெட்டிகளில் 4 கீழ் படுக்கைகள் உள்ளன.