இந்தியா

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

செய்திப்பிரிவு

திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம் மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலையில் லட்ச குங்குமார்ச்சனை மற்றும் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இன்று காலை 8.30 மணிக்கு கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவத்துக்கான கொடி ஏற்றப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT