இந்தியா

அந்தமான் சென்டினில் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை மீட்கும் பணியை கைவிட வேண்டும் :மானுடவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அந்தமான் தீவில் பழங்குடியின ரால் கொல்லப்பட்ட அமெரிக் கரின் உடலை மீட்கும் முயற் சியை கைவிட வேண்டும் என மானுடவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யூனியன் பிரதேசமான அந்த மான் அன்ட் நிக்கோபர் தீவுகள் பகுதியில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டு களாக வெளியுலக தொடர்பு இல்லாமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பகுதிக்குள் வெளியாட்கள் யாரை யும் அனுமதிப்பதில்லை என நம்பப் படுகிறது. இதையும் மீறி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்று விட்டதுடன் அவர்களுடைய உடலை மீட்கவும் அனுமதித்த தில்லை.

இந்நிலையில், அமெரிக் காவைச் சேர்ந்த ஜான் ஆலென் சாவ் (26) என்ற இளைஞர், அந்த மக்களை தொடர்புகொள் வதற்காகவும் கிறிஸ்தவ மதத்தை போதிக்கவும் சமீபத்தில் அங்கு சென்றுள்ளார். ஆனால் கடந்த 17-ம் தேதி பழங்குடியின மக்கள் ஜானை கொன்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜானின் உடலை மீட்பதற்காக போலீஸாரும் இந்திய கடலோர காவல் படையினரும் கடந்த 23-ம் தேதி ஒரு படகு மூலம் சென்டினல் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, பழங்குடியின மக்கள் வில் மற்றும் அம்புடன் தயாராக நின்றிருந்ததைப் பார்த்ததும் அவர்கள் திரும்பி வந்துவிட்டனர்.

இந்நிலையில், ‘ஐலேன்ட்ஸ் இன் ப்ளக்ஸ் தி அந்தமான் அன்ட் நிக்கோபர் ஸ்டோரி’ என்ற நூலின் ஆசிரியர் பங்கஜ் சேக் சரியா, மானுடவியலாளர் விஷ்வ ஜித் பாண்டியா உள்ளிட்டோர் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள் ளனர். அதில் கூறியிருப்பதாவது:

சென்டினல் தீவில் கொல்லப் பட்ட அமெரிக்கரின் உடலை மீட்கச் சென்ற குழுவினர் பற்றியும் அங்கு பழங்குடியின மக்கள் ஆயுதங் களுடன் தயாராக இருந்தது குறித்தும் ஊடகங்களில் செய்தி கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் வெளியாட்களை அனு மதிப்பது இல்லை என்ற கருத் தில் பழங்குடியின மக்கள் உறுதி யுடன் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், அமெரிக்கரின் உடலை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் வன்முறை சம்பவங்கள் நடக்கும். அத்துடன் உயிரிழப்பும் எற்படும்.

சென்டினல் தீவு பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவர்களுடன் மோதுவ தால் எதையும் சாதிக்க முடியாது. தேவையற்ற பதற்றமும், பிரச்சினையும்தான் ஏற்படும். யாரு டைய அழுத்தம் காரணமாக மத்திய அரசும் அந்தமான் நிர்வாகமும் அமெரிக்கரின் உடலை மீட்க முயற்சி செய்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால், இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT