இந்தியா

கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி: டெல்லியில் குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள்

செய்திப்பிரிவு

பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி லட்சக்கணக்கான விவசாயிகள் இன்று பேரணி நடத்துகின்றனர்.

பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் மத்திய அரசை தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதுபோல மகா ராஷ்டிர மாநில விவசாயிகளும் கடந்த வாரம் மும்பையில் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நவம்பர் 30-ம் தேதி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப்போவதாக அனைத்து இந்திய விவசாயிகள் ஒத்துழைப்பு குழு (ஏஐகேஎஸ்சிசி) அறிவித்திருந்தது. இந்தக் குழுவில் நாடு முழுவதும் உள்ள சுமார் 200 விவசாயிகள் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை முதலே ரயில், பஸ் மூலம் டெல்லி யில் குவியத் தொடங்கினர். பின்னர் மாநகரின் பல்வேறு பகுதி களிலிருந்து ராம்லீலா மைதானத்தை நோக்கி பேரணி யாக சென்றனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையின் (8) மஹிபால்பூர் முதல் தவுலா கான் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மாலையில் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இரவில் அங்கேயே தங்கிய விவசாயிகள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங் கத்தைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் நேற்று டெல்லி சென்றடைந்தனர்.

இதுகுறித்து இந்த சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு கூறும் போது, “பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளைபொருட் களுக்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம். அப்போது போலீஸார் எங்களைத் தடுத்து நிறுத்தினால் நிர்வாண போராட்டம் நடத்துவோம்” என்றார்.

SCROLL FOR NEXT