இந்தியா

நக்சல்களுடன் காங். பிரமுகருக்கு தொடர்பு?

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை அடுத்துள்ள பீமா கோரேகானில் கலவரத்தை தூண்டியதாக 10 பேர் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நக்சல்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் மொபைல் போன் எண் இருந்துள்ளது.

"பீமா கோரேகான் தொடர்பான போராட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்று நக்சல்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண், திக்விஜய் சிங்கின் மொபைல் போன் எண் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த மகாராஷ்டிர போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT