உத்தரப்பிரதேசம், மதுராவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தை மீது ரயில் எறிச் சென்றும் அந்த குழந்தை எந்தவிதமான காயமின்றி தப்பியது.
உத்தரப்பிரதேசம் மதுரா ரயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு ரயில் நடைபாதையில் கடந்து சென்றது.அப்போது, நடைபாதையில் நின்றிருந்த ஒரு பயணி கையில் இருந்த ஒரு வயது குழந்தை நடைபாதைக்கும், ரயிலுக்கும் இடையை உள்ள இடைவெளியில் திடீரென விழுந்தது.
இந்த காட்சியைக் கண்ட அங்கிருந்த அனைத்துப் பயணிகளும் பதற்றத்தின் அலறினார்கள். ஆனால், ரயில் வேகமாகக் கடந்து சென்றபின், தண்டவாளத்தில் இருந்து குழந்தையை அங்கிருந்த ஒருவர் தூக்கினார். இதில் மிகவும் வியக்கும்படியாக, குழந்தை எந்தவிதமான காயமும் இன்றி உயிர்தப்பியது. அந்தக் குழந்தை அதன்பின் அதன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் அந்த குழந்தையை பெற்றுக்கொண்ட தாய், பாசத்துடன் தழுவி முத்திடமிட்டார்.
இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். இந்தக் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.