இந்தியா

புனே நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புனேவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் புதை மண்ணுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள மாலின் கிராமத்தில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் சிக்கின.

வீடுகளில் இருந்த 160-க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையைச் சேர்ந்த சுமார் 400 வீரர்கள் மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 75 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் கடந்த 3 நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு பகுதியில் இருந்து 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT