ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடை ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச் சராக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத் துக்கு அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியம் (எப்ஐபிபி) சட்ட விரோதமாக அனுமதி வழங்கிய தாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை யினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இத்தடையை அவ்வப்போது நீட்டித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர்கள் குமார் துபே, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆஜரா கினர். மத்திய அரசு சார்பில் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை ஜனவரி 15-ம் தேதிக்கு நீதிபதி ஏ.கே.பதக் தள்ளி வைத்தார். மேலும் கைது நடவடிக்கைக்கு எதிரான தடையை ஜனவரி 15 வரை நீட்டித்து உத்தர விட்டார். இந்த வழக்கில் விசார ணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.