வேட்பாளர்கள் நாளொன்றுக்கு ரூ.20,000 வரை ரொக்க பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று கடந்த 2011 ஏப்ரலில் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்த வரம்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
வேட்பாளர்கள் நாளொன் றுக்கு ரூ.10,000 வரை மட்டுமே ரொக்க பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை காசோலை, வரைவோலை, மின்னணு முறையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒரு வேட்பாளர் ரூ.10,000 வரை மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறை கடந்த 12-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள் ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையங்களுக்கு சுற் றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.