இந்தியா

பாக். குருத்வாரா வழித்தடத்துக்கு அடிக்கல்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா அமைந்துள்ளது. குருநானக்கின் பிறந்தநாளையொட்டி, இங்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சீக்கியர்கள் வந்து வழிபாடு நடத்துவர்.

இதனிடையே, அந்த குருத்வாராவுக்கு எளிதாக செல்லும் வகையில் பஞ்சாபின் குருதாஸ்பூருக்கும், பாகிஸ்தானின் கர்தார்பூருக்கும் இடையே வழித்தடம் அமைப்பது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

அதன்படி, இரு நாடுகளும் தங்களின் சர்வதேச எல்லைப் பகுதி வரை இவ்வழித்தடத்தை அமைக்கவுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்த குருத்வாரா வழித்தடத்தின் அடிக்கல் நாட்டு விழா வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பஞ்சாபின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சித்து பங்கேற்கவுள்ளார்.

SCROLL FOR NEXT