இந்தியா

கங்கையை சுத்தப்படுத்த செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கங்கையை சுத்தப்படுத்தும் செயல் திட்டத்தை இரண்டு வாரத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் புனித நதியான கங்கையை சுத்தப்படுத்த வலியு றுத்தி எம்.சி.மேத்தா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுக ளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இம்மனு, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசார ணைக்கு வந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நதியை ஒட்டி சுத்தி கரிப்பு நிலையங்கள் அமைப்ப தால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ஆஜராகி, “மத்தியில் இப்போதுதான் புதிய அமைச்சரவை பொறுப்பேற் றுள்ளது. அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவ தால், கங்கை சுத்திகரிப்பு திட்டம் தாமதமாகி வருகிறது” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அவசியம் இல்லாத பல பணிக ளுக்கு முக்கியத்துவம் அளிக்கி றீர்கள். நாட்டின் புனித நதியான கங்கையை சுத்தப் படுத்தும் பணியை பின்னுக்குத் தள்ளி விட்டீர் கள். இப்பணியை முதலில் எடுத்து செயல்படுத்தவேண்டும். கங்கையை சுத்தப்படுத்த தேவைப்படும் செயல் திட்டம், இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை இரண்டு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT