இந்தியா

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த புதிய விதிமுறைகள் 

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த புதிய விதி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங் களில் இருந்து டெல்லிக்கு போராட் டம் நடத்த வருபவர்களின் தேர் வாக ஜந்தர் மந்தர் பகுதி இருந் தது. இவ்வாறு அங்கு நடத்தப் படும் போராட்டங்களால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு ஆகியவற்றை காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன் றம், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கடந்த ஆண்டு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக விவசாயி அய்யாகண்ணு உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜந்தர் மந்தர் பகுதியில் சில நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது.

இதில், ஜந்தர் மந்தரின் முக்கிய சாலையை தவிர்த்து, அதற்கு இணையாக இருக்கும் நாடாளு மன்ற சாலையில் மட்டும் போராட் டம் நடத்த அனுமதி வழங்கப் பட்டது. இந்த சூழ்நிலையில், டெல்லியில் அகில இந்திய விவ சாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின ரால் சுமார் 30,000 பேர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்துவோருக்கான புதிய விதிமுறைகளை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளி தழிடம் டெல்லி காவல்துறையின் துணை ஆணயர் மதுர் வர்மா கூறும்போது, ‘பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதால் ஓராயிரம் பேருக்கு அதிகமானவர்கள் இனி ஜந்தர் மந்தரில் அனுமதிக்கப்பட மாட்டார் கள்’ எனத் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளின்படி, ஓரா யிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்கும்பட்சத் தில், அவர்கள் ராம்லீலா மைதா னத்துக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு 50,000 பேர் வரை அமரும் வசதிகள் உள்ளன. ஜந்தர் மந் தரில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் போராட்டத்தில் யாரும் நிரந்தர அல்லது தற்காலிக கூடாரங்கள் அமைக்கக் கூடாது.

இதற்காக, டெல்லிக்குள் போராட்டக்காரர்களின் 25 பேருந்து கள் மட்டுமே நுழைய அனுமதிக் கப்படும். இந்தப் பேருந்துகளை ஜெய்சிங் சாலையில் நிறுத்த வேண்டும். மாட்டு வண்டிகளுக்கு அனுமதி கிடையாது.

போராட்டப் பகுதி அல்லது அங்கு வாகனத்தில் அமைந்த ஒலிப்பெருக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்த துணை ஆணையரிடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

கத்தி, கம்பு போன்ற ஆயு தங்களைப் போராட்டக்காரர்கள் பயன்படுத்தக் கூடாது. கொடும் பாவி உள்ளிட்டவற்றை எரித்து போராட்டம் நடத்தக் கூடாது. சமையல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத் தில் வன்முறை மற்றும் அரசு பணி யாளர்கள் மீது தாக்குதலும் கூடாது என்பது உட்பட மேலும் பல விதி முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலான இந்த விதி முறைகளை மீறப்போவதில்லை என போராட்டக்காரர்களிடம் ஒப்பு தல் பெறப்படும். இந்த விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்காமல் இருக்கவும் பரிசீலிக்கப்படும் என புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT