இந்தியா

அக்ஷர்தாம் கோயில் தாக்குதலில் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி காந்திநகரில் உள்ள அக் ஷர்தாம் கோயிலில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் ஊற்றம்சாட்டப்பட்ட முகமது பரூக் ஷேக் என்ற நபரை அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் நேற்று அகமதாபாத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து அகமதாபாத் காவல் உதவி ஆணையர் பக்ரித்சிங் கோஹில் நேற்று கூறும்போது, “கோயில் மீதான தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு பரூக் தப்பிச் சென்றார்.

இந்நிலையில் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய பரூக்கை கைது செய்துள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT