இந்தியா

பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது போலீஸ் வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பார்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியின் மால்வியா நகர் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் சோம்நாத் பார்தி. இவர், அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை சோம்நாத் பார்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக நொய்டா காவல் நிலையத்தில் அந்தப் பெண் பத்திரிகையாளர் நேற்று புகார் அளித்தார்.

இதன்பேரில், எம்எல்ஏ சோம்நாத் பார்தி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT