கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் (லஞ்சம்) அடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்வதற்கான தடையை டிசம்பர் 18 வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.