அயோத்தி பிரச்சினையில் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண வேண்டும். இதில் முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கயோருல் ஹசன் ரிஸ்வி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதரப் புக்கு சாதகமாகவும் மறுதரப் புக்கு பாதகமாகவும் அமையக் கூடும். எனவே இந்த பிரச்சினை யில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண்பது சிறந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
விஎச்பி செயல் தலைவர் அலோக் குமாரை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன். இதேபோல சன்னி வக்பு வாரிய நிர்வாகிகள், இஸ்லாமிய அறிஞர் களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அயோத்தி பிரச் சினையில் முஸ்லிம்கள் பெருந் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மெக்கா, மெதினா முஸ்லிம் களின் புனிதத் தலங்களாகும். இது போல அயோத்தி இந்துக்களின் புனித பூமியாகும். அந்த கோணத் தில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத் கூறியபோது, “முத்தலாக் விவா கரத்துக்கு தடை விதிக்க மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிறப் பித்தது. இதேபோல அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டத்தை பிறப்பிக்காதது ஏன்? ராமர் கோயில் கட்ட மத்திய அரசுக் கும் உத்தர பிரதேச அரசுக்கும் ஆர்வம் இல்லை. இந்த விவ காரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.