வரும் செப்டம்பரில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அதற்கு முன்னோட்டமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி ஆகியோர் அண்மையில் டெல்லி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் வியாழக்கிழமை மாலை டெல்லி வந்தார்.
பிரதமர் மோடியை டெல்லியில் வெள்ளிக்கிழமை அவர் சந்தித் துப் பேசினார். உலக அமைதிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இராக் நிலவரம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.