மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந் ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தவறான கேள் விகளுக்கு 196 கருணை மதிப் பெண்கள் வழங்கி புதிய தர வரிசை பட்டியலை வெளி யிட உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.