ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஒரே நாளில் 2 தடவை தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “பூஞ்ச் மாவட்டம் ஹமிர்பூரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது” என்றார்.
முன்னதாக, அதிகாலை 2 மணிக்கு சர்வதேச எல்லையை ஒட்டிய ஆர்னியா மற்றும் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.