இந்தியா

மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி: ராஞ்சியில் பாஜக - ஜெ.எம்.எம். தொண்டர்கள் மோதல்

செய்திப்பிரிவு

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள விமான நிலையத்தில், பாஜக - ஜார்கண்ட் முக்தி மோர்சா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து பாஜகவுக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அண்மையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றக் கூட்டத்தில், மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பேசிக் கொண்டிருந்த போது பாஜகவினர் மோடி...மோடி... என கோஷமிட்டு, ஹேமந்த் சோரன் பேசுவதற்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இந்நிலையில், இன்று ராஞ்சி வந்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர்.

இதனால், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT