இந்தியா

மத்திய அமைச்சருக்கு லஞ்சம்: சிபிஐ அதிகாரி புகார்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பரஸ்பரம் புகார் எழுப்பினர். ராகேஷ் அஸ்தானா மீதான புகாரை மணீஷ் குமார் சின்ஹா தலைமையிலான சிபிஐ குழு விசாரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் மனீஷ் குமார் சின்ஹா நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இடமாற்ற உத்தரவுக்கு எதிராக மனீஷ் குமார் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனீஷ் குமார் தனது மனுவில், “எனது இடமாற்றம் தன்னிச்சை யானது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு எதிரான வழக்கில் தலை யிடுவதற்காக, மத்திய இணை அமைச்சர் ஒருவருக்கு சில கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சட்ட அமைச்சக செயலாளர் சுரேஷ் சந்திரா உட்பட அரசில் உள்ள பலர் தலையிட்டனர்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT