காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க வகை செய்யும் இன்சூரன்ஸ் மசோதா மீது மாநிலங்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெறும். இந்த தகவலை நிதி அமைச்சக உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
காப்பீட்டுத் துறையில் இப்போது அன்னிய முதலீடு வரம்பு 26 சதவீதமாக இருக்கிறது. இதை 49 சதவீதமாக உயர்த்த மசோதா வகை செய்கிறது. அந்நிய முதலீடு அதிகரித்தாலும் நிர்வாகமும் கட்டுப்பாடும் இந்திய முதலீட்டாளர்கள் வசமே இருக்கும்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை விவாதிக்க நிர்ணயிக்கப்பட் டிருந்த அலுவல் பட்டியலில் மசோதா சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் செய்யப்பட்ட உத்தேச திருத்தங்களை ஆராய எதிர்க்கட்சிகள் கூடுதல் நேரம் கோரியதால் விவாதத்துக்கு வரவில்லை. இன்சூரன்ஸ் மசோதாவின் மூலப்படியில் 97 உத்தேச திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் முதலீடு பற்றாக்குறையாக இருப்பதால் இதில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதம் உயர்த்த வேண்டும். எனினும். நிர்வாகம் இந்திய முதலீட்டா ளர்களிடமே இருக்கும் என்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து ஆற்றிய உரையில் அருண் ஜேட்லி கூறியிருந்தார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அந்நிய முதலீடு வரும்.